Skip to main content

வாழ்வே மாயம்.... தொடர் பதிவு V


பதிவினை தொடங்கும் போது ஏதோ ஒன்று அல்லது இரண்டு பதிவுகளில் முடிந்து விடும் என்று தான் நினைத்து ஆரம்பித்தேன், ஆனால் 5வது பதிவு வரை வர வேண்டிய அவசியமாகி விட்டது. இன்னும் ஒரு பதிவு வரலாம் அல்லது இத்தோடும் முடியலாம்... பார்க்கலாம்....

சகோதரி சித்ரா அவர்கள் எல்லா பாகங்களையும் வரி விடாமல் வாசித்து வாக்களித்து...கருத்துக்களும் தெரிவித்து இருப்பது நெகிழ்ச்சியாக இருந்தது அவரின்...வாசிக்கும் திறன் மட்டுமல்லாது பதிவர்களை ஊக்குவிக்கும் ஒரு தாயுள்ளமும் இருப்பதை என்னால் உணர முடிந்தது. சாதாரணமாக பின்னூட்டத்தில் வாழ்த்து சொல்லவதை விட.... முதன்மைப் பதிவிலேயே அவருக்கு நன்றி தெரிவிப்பதுதான்....தர்மம்..... நன்றிகள் சகோதரி.....!

வாழ்க்கையின் ஓட்டத்தோடு எல்லா நிகழ்வுகளும் சட்டென நடந்து முடிந்து விடுகின்றன.... நினைத்துப் பார்க்கும் போது எல்லாமே கனவாகத்தான் தோன்றுகின்றன.... சரி....மேற்கொண்டு நாம் பயணிக்கலாம்.

இது வரை
பாகம் 1 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i.html
பாகம் 2 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i-i.html
பாகம் 3 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i-i-i.html
பாகம் 4 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i-v.html

இனி...

உரத்த குரலில் அவர் எழுப்பிய ஓசை எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது....அவரும் ஒரு மாமாதான்...சட்ட்னெ திரும்பி நான் முறைத்துப்பார்த்தேன்....ஏங்க உள்ள கொண்டு போகக்கூடாது?னு அதட்டிக் கேட்டேன்....எனது கோபம் அவர் வயதை மறைத்துவிட்டது. இல்ல இல்ல ...அவச்சாவு செத்திருக்கான்....வீட்டுக்குள்ள கொண்டு போக கூடாது...புள்ள குட்டிங்க...வாழுற வீடுள்ளன்னு சொன்னாரு.....

அடப்பாவிகளா...எவ்வளவு கஸ்டப்பட்டு வீடு கட்டினாரு தெரியுமா....ஒவ்வொரு செங்கல்லும் அவரோட உழைப்பு வியர்வை...அவர் கட்டுன வீட்டுக்குள்ள அவரோட உடம்பை ஒரு 2 நிமிடமாவது வைக்க முடியாதா? எனக்குள் ஏற்பட்ட கேள்வி அழுகையாய் வெடித்தது. பெரிய மனிதரின் சொல் கேட்டு...உயிரில்லாத அந்த உடம்பு தெருவிலேயே வைக்கப்படது.....உறவுகளின் ஒப்பாரியும்....ஒரு பக்கம் மற்றொரு பக்கம் அவருக்கான....இறுதி ஊர்வலத்துக்கான....ஊர்தி தயாராகிக்கொண்டிருந்தது.

மனிதர்கள் உயிரோடு இருக்கும் போது எவ்வளவு ஆர்ப்பாட்டங்கள்...கட்டிப்பிடிப்பதும்...முத்தம் கொடுப்பதும்...சலவை சட்டையும் வேட்டியும்....மோதிரமென்ன...செயின் என்ன....வாசனை திரவியங்கள் என்ன...அண்ணானு ஒருத்தன்....சொல்லங்க தலைவான்னு ஒருத்தன்...ஆமாம் பாஸ்னு ஒருத்தன்...அன்பே....டார்லிங்..கண்ணா....ராஜா...செல்லமே..எத்தனை எத்தனை பெயர்கள்.....இப்படியெல்லாம் கூப்பிட்டு கடைசியில்..பிணம்டானு ஒரே வார்த்தையில் முடிச்சுடுறாங்க....அடச்சே...என்ன.... வாழ்க்கை இதுன்னு தோன்றியாது. பட்டினத்தார் சொன்னது போல இறந்த உடலைச் சுற்றி இறக்கப்போகும் உடல்கள் ...ஒப்பாரி வைத்த காட்சியும்....சட்டென்று முடிவுக்கு வந்தது........

இறுதி ஊர்வலம் நகரதொடங்கி தெருமுனை வரையும்....சொந்த பந்தங்களின்....அழுகைக்குரல் கேட்டுக் கொண்டிருந்தது......எனக்குள் கண்ணதாசனின் வரிகள்...ஞாபகம் வந்தது...

கூப்பிட்டு பார்த்தால்...கேட்காது....
எந்த கோர்ட்டுக்கும் போனால் ஜெயிக்காது...
அந்த கோட்டையின் வாசல் திறக்காது....
போனால் போகட்டும் போடா....

நானும் ஒரு தோள் கொடுத்து தூக்கி...மாமாவின் உடலோடு... நகர்ந்து கொண்டிருந்தேன்.... நந்தனத்தில் இருந்டு சி.ஐ.டி . நகர் வழியாக கண்ணம்மா பேட்டை நோக்கி.....எல்லாமே புதுசு எனக்கு.....ஆர்ப்பாட்டமாய்.....எகத்தாளமாய்.....இருந்த என் வாழ்வின் ஒரு மிகபெரிய...திருப்புமுனையாகிப் போனது இந்த நிகழ்வு! இதோ.....ஊரெல்லாம் உலகெல்லாம் சுற்றும் மனிதர்கள் கடைசியாக உள் நுழையும்....வாயில் வந்து விட்டது......கண்ணம்மா பேட்டை.........கலக்கமாய்...ஒரு இறுதி ஊர்வலத்தின் இறுதி நிலைக்கு....வந்து விட்டோம்.... நெஞ்சமும் தோளும் கனக்க...ஒரு.....இறுக்கத்துடன்...ஊர்வலம்...வாயிலை கடந்து உள் நுழைகிறது......


தேவா. S



(தொடரும்)


Comments

Chitra said…
////இப்படியெல்லாம் கூப்பிட்டு கடைசியில்..பிணம்டானு ஒரே வார்த்தையில் முடிச்சுடுறாங்க....அடச்சே...என்ன.... வாழ்க்கை இதுன்னு தோன்றியாது. பட்டினத்தார் சொன்னது போல இறந்த உடலைச் சுற்றி இறக்கப்போகும் உடல்கள் ...ஒப்பாரி வைத்த காட்சியும்....சட்டென்று முடிவுக்கு வந்தது........///


...... ஒரு வாழ்க்கை சம்பவம் எவ்வளவு தூரம் உங்களை உலுக்கி போட்டு இருக்கிறது என்பதை, உங்கள் பதவின் ஒவ்வொரு வார்த்தையிலும் உணர முடிகிறது.

பிறப்பையும் இறப்பையும் சாதாரணமாக எடுத்து கொள்வது பலர். ஒரு பிறப்பிலோ இல்லை, இறப்பிலோ, தன் வாழ்க்கையின் நோக்கத்தில் புதிய பாதையை - புதிய அர்த்தத்தை காண்பது வெகு சிலரே. தேவா, இந்த அறிவு அக்னியின் ஒளியும் வெம்மையும் குறையாமல் இருந்து வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்!

இன்று, தற்செயலாக, என் கணவருக்கு உங்களை பற்றி சொல்லி, இந்த பதிவை சேர்ந்து வாசிக்க அவரையும் அழைத்தேன். என்னை பற்றி குறிப்பிட்டு இருந்ததை கண்டு, நாங்கள் நெகிழ்ந்தோம். நன்றி, தேவா!
//மனிதர்கள் உயிரோடு இருக்கும் போது எவ்வளவு ஆர்ப்பாட்டங்கள்//

நான் கூட சில சமயம் யோசித்திருக்கிறேன்.. இருக்கும் போது அவங்களுக்கு பிடிச்ச உணவு செஞ்சு குடுக்க கூட சலிச்சுப்பாங்க.. அதுவே அவங்க இறந்த பிறகு.. இத்தன நாள் விசேஷம் அது, இதுன்னு... வித விதமா செஞ்சு படையல் வைப்பாங்க.. அது எதுக்கு?

எழுத்துப் பயணம் தொடர வாழ்த்துக்கள்
சித்ரா அவர்கள் தான் உங்கள் தளத்தை எனக்கு அறிமுகப் படுத்தினார். நல்ல தொரு மாறுப்பட்ட பதிப்பை வாசித்த திருப்தி, மகிழ்ச்சியுடன் சென்று, மீண்டும் வருகிறேன்.
dheva said…
ஆனந்தி...மறும் தமிழ் உதயம் உங்களின் முதல் வருக்கைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி! தொடர்ந்து வந்து பின்னூட்டமிடுங்கள் அது இன்னும் என் எழுத்துக்கு வலுவூட்டும்! எனது தளத்தை உங்களுகு அறிமுகப்படுத்த்திய சகோதரி சித்ராவிற்கு அனேக நன்றிகள்!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த