Skip to main content

எனது தேசத்தின் வேர்கள்.....






















ரொம்ப நாளைக்கு முன்னால ஒரு படம் போட்டேன், அதோட இறுதி பாகத்தை எழுதிடலாம்னு நினைச்சப்ப மனசுக்குள்ள ஒரு விசயம் இல்லை..இல்லை இனிமே அது தேவையில்லைன்னு சொன்னிச்சு... சரி போகட்டும்னு விட்டுட்டு அடுத்தவேளைய பாத்துட்டு போய்ட்டேன் ஆனா காலம் என்னை இழுத்து பிடித்து நிறுத்தி...நீ எழுதிதான் ஆகணும்னு சொல்லும் போது........அந்த பிரமாண்டத்துக்கு முன்னால நான் என்னதான் பண்றது....?



ட்ரெய்லர் I

ட்ரெய்லர் II

ட்ரெய்லர் III

ட்ரெய்லர் IV

ட்ரெய்லர் V

ட்ரெய்லர் VI

ட்ரெய்லர் VII

ட்ரெய்லர் VIII

ட்ரெய்லர் VIIIB

படம் I


படத்தின் தொடர்ச்சி....

சமீபத்தில் அலுவலக பணி நிமித்தமாக ஒரு நிறுவனத்தின் மானேஜிங் டைரக்டரை சந்திக்க சென்றிருந்தேன்...! தொலைபேசியில் பேசும் போதே கணித்து விட்டேன்.. அந்த தோலின் நிறம் வெள்ளை என்று அது அவரின் மொழிப் பிரயோகத்தின் மூலமாக கணிக்கப்படவில்லை மாறாக பேசிய அவர் பேசிய தொனியின் வாயிலாக உணர்ந்தேன்....

அவரின் அலுவலகத்தில் அவரை சந்திக்க நான் உறுதி செய்த நேரம் 10:30 காலை. 10.25க்கு அந்த அலுவலக கார் பார்க்கிங்கில் எனது காரை நிறுத்தி விட்டு நான் அந்த அலுவலக வரவேற்பறைக்குள் நுழைந்த போது மணி 10:27. என்னுடைய பிஸினஸ் கார்டை அந்த காரியதரிசியின் கைகளில் திணித்த போது... அதிலிருந்த என் பெயரைப் பார்த்த அந்த பெண்ணும் ஒரு வெள்ளையான தோலுக்குரியவர்தான்....!

அம்மணி புன்முறுவலோடு.... தங்களின் முழுப்பெயரும் உங்களின் பிஸினஸ் கார்டில் இல்லை முழுப்பெயர் என்ன? என்று கேட்டார்..... ! அதற்கு பதிலாக நான் சொன்னேன்..." இட் டஸ்ஸின் மேட்டர்.. ஐம் தேவன்.... அண்ட் ஃப்ரம் விச் கம்பெனி தட்ஸ் தேர்.. இன் மை கார்ட்.... தட்ஸ் ஆல்...." என்று சொன்னதற்கு.. அவள் சொன்னாள்... " சாரி.. சார்.. அன்டில் அன்லெஸ் உங்க முழுப் பெயரை கொடுக்காவிட்டால் எனது பாஸ் உங்களை சந்திக்க மாட்டார் என்று சொன்னார்.

சரி.... நான் கொடுத்த பெயரையும் எனது அலுவலக பெயரையும் சொல்லுங்கள். உங்கள் முதலாளி என்னை சந்திக்க வில்லையெனில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.. ஐ வில் மூவ் பேக் என்று சொல்லிவிட்டு.. அங்கே இருந்த இருக்கைக்குள் புதைந்தேன்....! அச்சு பிறழாத ஆங்கிலத்தில் அழகாக நான் கூறியதை அவளுடைய தலைமையிடம் தெரிவித்து விட்டாள்...

கொஞ்சம் அமைதியாக கழிந்த நிமிடங்கள் கழிந்து......ஐயம் சார்ல்ஸ்....என்று அறிமுகம் செய்து கொண்ட அந்த கனத்த உருவம் ஒரு பிரிட்டிஷ் நேஷனாலிட்டி என்று என் மூளை கணித்து முடித்து இருந்தது. எனக்கு சில வேலைகளை அவர் காண்பிக்க வேண்டும்.. அதனை கணித்து அதை செய்வதற்கு எனது நிறுவனம் எவ்வளவு சார்ஜ் செய்யும் என்று ஆன் த ஸ்பாட் நான் கொட்டேசன் கொடுக்க வேண்டும்....இதுதான் அந்த சந்திப்பின்..அவசியம்...!

என்னை உள் அறைக்கு அழைத்து சென்ற அவர்....விவரிக்கத் தொடங்கினார். இத்தனை ஆர்ட்வொர்க்ஸ் இருக்கிறது அதை இன்ஸ்டால் செய்ய வேண்டும்... இடைவிடாமல் பேசிய அவர் இதை செய்வதற்கு 2000 திர்ஹம்ஸ் தருகிறேன். எப்போது வேலையை ஆரம்பிக்கிறீர்கள் என்று கேட்டார்....! என்னிடம் சில கேள்விகள் இருந்தது... அவர் பேசி முடித்தவுடன்.... நான் கேட்டேன்...உங்களின் பட்ஜட் 2000 திர்ஹம்ஸ் சரிதானே? எனக்கு சில விபரங்கள் இந்த வேலை நிமித்தமாக வேண்டும்... கொடுங்கள் பின் நான் எனது விலையைச் சொல்கிறேன்....என்று சொன்னவுடன்... மிஸ்டர். சார்லஸின் முகம் சிவந்து போய் விட்டது...

லுக்.. ஐம் த பாஸ் ஹியர்....யூ டோண்ட் இன்ட்ராகேட் மீ....அண்ட்.. நான் அதன் விலை இவ்வள்வுதான் என்று சொல்லி விட்டேன்.. 3 மணி நேர வேலை... அவ்வளவுதான் நானே செய்து விடுவேன் என்றார்... ! நான் சரி நீங்களே செய்து விடுங்கள் நான் விலை கொடுக்க வேண்டுமெனில் எனக்கு சில விபரங்கள் தேவை என்று கூறி நான் எனது இருக்கையை விட்டு எழுந்தேன்...

" ஆர் யூ ஃப்ரம் இன்டியா? ....என்று சூழலுக்கு சம்பந்தம் இல்லாத கேள்வியை கேட்டார். யெஸ்... ஐயம்....என்ற பதிலைச் சொல்லிவிட்டு....ஒரு மாதிரி ஏன் இதைக் கேட்டாய் என்பதைப் போல அவரின் கண்களை ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தேன்....

கனைத்துக் கொண்டு பேசத்தொடங்கியிருந்த ஆந்த ஆணவம் சொன்னது நான் ஒரு பிரிட்டிஷ் காரன்...எங்களின் அனுமானமும் திட்டமிடலும், எப்போதுமே ஒரு இந்தியனை விட மேன்மையானது. இந்தியர்களிடம் ஒழுங்கு இல்லை என்று இந்தியாவைச் சேர்ந்த இங்கிலாந்தில் செட்டில் ஆகியிருக்கும் எனது நண்பர்களே கூறக் கேட்டிருக்கிறேன். உங்களிடம் சுத்தம் இல்லை, நீங்கள் எல்லாம் கூட்டம் கூட்டமாக.. சேர்ந்து முடிவெடுப்பவர்கள். உங்களிடம் தனித்தன்மை இல்லை...இப்போது சொல்... இந்த வேலையை செய்வதற்கு எப்போது வருகிறீர்கள்....நான் வரவேற்பரையில் பணத்தை கொடுத்து விட்டுப் போகிறேன்....வந்து உனது ஆட்களை வாங்கிக் கொள்ளச் சொல், என்று பேசி முடிந்திருந்தார்.

இப்போது நான் சார்ல்ஸ்க்கு நேருக்கு நேராய் நின்றேன்....அவன் முகம் நோக்கி நேருக்கு நேராய் பார்த்து கண்களுக்குள் ஊடுருவிக் கிடந்த ஆதிக்க தேசத்தின் திசுக்களை ஒவ்வொன்றாய் தேடிப் பிடித்தேன். சார்ல்ஸ் என் பார்வையால் கொஞ்சம் சலனப்பட்டு என் உற்று நோக்கலை சமாளிக்க முடியாமல் போனதை உணர்ந்தேன்....மெலிதாய் ஒரு புன்னைகையை அவனுக்கு பரிசளித்தேன்....

" மிஸ்டர். சார்ல்ஸ்..........நான் உன்னுடன் தொழில் செய்ய வந்தேன். நீ வேலை கொடுக்கிறாய். என் நிறுவனம் வேலை செய்யப் போகிறது. நான் என்னுடைய நிறுவனத்தின் பிரதிநிதி. என்னை இந்திய பிரதிநிதியாய் நீங்கள் பார்த்தது முதல் தவறு. மேலும் இந்தியாவினைப் பற்றிய தவறான கற்பிதங்களை உங்கள் மூளையில் ஏற்றி வைத்த என் சக தேசத்து இந்தியனின் தவறு.....

இப்போது உனது வேலைக்கான எனது விலை தோராயமாக திர்ஹம்ஸ் 5000 வரும், உனக்கு விருப்பம் இருப்பின் எனக்கு உனது பர்ஸேஸ் ஆர்டரை அனுப்பி வையுங்கள்...பேமெண்ட் சுட் பீ 100% அட்வான்ஸ் பிஃபோர் த வொர்க் ஓ.கே....! என்று கூறி முடித்து விட்டு...எல்லா பார்மாலிட்டிகளுக்குப் பிறகு....நான் ஒரு விசயம் உங்களிடம் சொல்லவேண்டும் சார்ல்ஸ் என்றேன்...

"இந்தியா பற்றிய கருத்தினை உங்களிடம் தெரிவித்த உங்களின் இந்திய நண்பர்களை நான் இந்தியர்கள் என்று சொல்ல மாட்டேன். உங்களின் தேசத்தில் பிழைப்புக்காக வந்து அங்கேயே தங்கிவிட்ட வேற்று நாட்டவர்கள்தான் எங்களைப் பொறுத்தவரைக்கும். அவர்களுக்கு இந்திய தேசத்தின் ஓட்டைகளும் தெரியும் சிறப்புகளும் தெரியும் ஆனால் சிறப்புகளை உங்களிடம் சொன்னால் அவர்களின் பிழைப்பில் மண் விழுந்து விடுமே...

இந்திய தேசத்தின் சமுதாய அமைப்பு, கலாச்சார கட்டமைப்பு மனிதர்களை முன்னிலைப்படுத்தியது. இங்கே தனித்து இயங்குதல் என்பது பிரபஞ்ச நியதிக்கே முரணாணது. தனித்து எதுவும் இயங்க முடியாது என்ற உண்மையை உணர்ந்த எம் பூர்வீக குடிகள் கூட்டமாய், குழுவாய் ஒருவர் சார்ந்து ஒருவர் வாழும் ஒரு உள் கட்டமைப்பையும் உருவாக்கி சென்றுள்ளனர். திருமணமும், அதற்காக கூட்டமாய் நாங்கள் சேர்தலும், சிரித்தலும், களித்தலும் எமது கலாச்சாரம், நவீனத்தில் எது மாறினாலும் எமது பூர்வம் மாறாது...மாறவும் கூடாது...

எங்கள் ஊரில் தெருவில் ஒருவன் இன்னொருவனை வெறுமனே வதைத்தலை வேடிக்கைப் பார்த்து செல்ல மாட்டோம்...யாரேனும் ஒருவர் நியாயம் கேட்போம். எங்கள் வலுவே அதுதான்.. என்ன ஒன்று நாங்கள் எப்போதும் எங்கள் மேன்மைகள் பற்றி பேசி பெறுமைப்படாமல் சிறுமைகளை எமக்குள் சீர் திருத்த முயலாமல் நாங்களே எங்களைப் பற்றி குறைகள் சொல்லிக் கொண்டு எம்மை எம்மவரிடம் இருந்து வேறு படுத்திக் காட்டி பெருமைகள் பட்டுக் கொள்வோம்.

எமது கலாச்சாரம் என்பது வெறுமனே உறவுகள் மட்டுமல்ல; உணவு, உடை, விழாக்கள், தொழில், ஆன்மீகம் என்று எல்லாம் சேர்ந்த கலவை. இவையெல்லாம் வடிவமைக்கப்பட்டது மனித வளத்திற்கும் மனித நலத்திற்கும்தான்......

நாங்கள் எங்களையும் சமுதாயத்தையும் உற்று கவனித்து வாழ பயிற்றுவிக்கப்பட்டவர்கள். எங்களின் வாழ்க்கைமுறையில் உடல் சாரா சூட்சும நிகழ்வுகள் நிறைய உண்டு அவை எம்மவர்களுக்கே விளங்கா வண்ணம் அவற்றை புகுத்தியிருப்பது எம் மூதாதையரின் நுட்பமான மூளை. உங்களின் மனம் சார் பிரச்சினைகளுக்கு உங்களின் தீர்வுகள் எப்படியாயிருக்கும் என்று என்னால் அனுமானிக்க முடியவில்லை ஆனல் என் தேசத்தில் ஒரு பிள்ளையார் கோவிலில் தேங்காய் உடைத்து விட்டு ஏதோ ஒரு திடத்தில் வாழ்க்கையை நகர்த்தி ஜெயித்தவர்கள் ஏராளம்.

தேங்காய் உடைத்தலின் அறிவியலை ஆராயும் நவீன மூளைகள் அங்கே நிகழ்ந்த மனோதத்துவ நிகழ்வுகள் பற்றி உணர்தல் சாத்தியமற்றதுதான்.

உங்கள் ஊரில் குப்பைகள் இல்லையா சார்ள்ஸ்? மது இல்லையா? விபச்சாரம் இல்லையா? மண முறிவு இல்லையா? சண்டைகள் இல்லியா? வன்முறை இல்லையா? லஞ்சம் இல்லையா? ஏழைகள் இல்லையா? அரசியல் குழப்பங்கள் இல்லையா? குறைகள் இல்லா தேசம் எது சார்ல்ஸ்....?

எல்லாம் நிறைந்ததாய் நீங்கள் சொல்லும் உங்களவர்கள் கடந்த நூற்றாண்டில் இந்தியாவில் கால் பதித்த நோக்கம்தான் என்ன? சுபிட்சங்கள் நிறைந்த தேசம் இந்தியா இப்போது தன் சொந்த மக்களால் அதை உணரமுடியாத வகையில் குழம்பிப் போயிருப்பது ஒரு தற்காலிக நிகழ்வு....அதுவும் மாறும்..."

பேசி முடித்து கையை நீட்டேனேன்... கை குலுக்கலுக்காய்.............புன் முறுவலோடு கை கொடுத்தார் சார்ல்ஸ்...........எனது கொட்டேசனுக்கான அப்ரூவலை மின்னஞ்சல் செய்வதாய் சொன்னார்....!

எனது வாகனம் சாலையில் வழுக்கிக் கொண்டிருந்தது மனம் எங்கோ பறந்து கொண்டிருந்தது. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், சிங்கப்பூரிலும், அமீரகத்திலும் இன்ன பிற தேசத்தில் நெடு நாட்கள் வாழ்பவர்களும் குடியுரிமை பெற்றவர்களும்.....சந்தோசமா அங்கேயே உங்கள் சேவையை தொடருங்கள், தவறு இல்லை.

ஆனால்.... இந்தியா பற்றிய வேறு பார்வையை வேற்று தேசத்தவரிடம் பதித்து விடாதீர்கள்....

நமது நாட்டிலிருக்கும் சிறப்புகளை கூறுங்கள்; இந்திய தேசத்தின் கலாச்சாரமும், அதன் மூலமும் உற்று நோக்கி உணரப்படவேண்டியவை இவற்றை விளக்கங்களால் தருவிக்க முடியாது. ஒரு தாயை, அவளின் தாய்மையை, அன்பை உணரத்தான் வேண்டும்....மாறாக ஆராய்ந்து பகுத்துப் பார்த்தால் அங்கே என்ன மிஞ்சும் என்பது எல்லோருக்கும் தெரியும்.

எம்மிடம் குறைகள் இருக்கலாம்....அவற்றை சீர்படுத்த முயலும் அதே நேரத்தில் அவற்றை கூறி எம்மக்களை இழிவு செய்தல் எவ்விதத்தில் சரி...?

நான், எனது தேசம், எனது மக்கள், எனது மண் இந்த அடையாளம் கொண்டு இவ்வுலகை நேசிப்போம்...குறைகள் கடந்த ஒரு தேசத்தினை படைக்கும் ஒப்பற்ற குடிமக்கள் ஆவோம்...!

(படம் முடிந்தது)


தேவா. S

பின் குறிப்பு: இந்த கட்டுரை பகிராத செய்திகளை மேலே இருக்கும் படம் சூட்சுமமாய் விளக்கும் (புரிந்தவர்களுக்கு மட்டும்...)

Photo Courtesy: Mr. Suresh Babu


Comments

//இந்தியா பற்றிய கருத்தினை உங்களிடம் தெரிவித்த உங்களின் இந்திய நண்பர்களை நான் இந்தியர்கள் என்று சொல்ல மாட்டேன். உங்களின் தேசத்தில் பிழைப்புக்காக வந்து அங்கேயே தங்கிவிட்ட வேற்று நாட்டவர்கள்தான் எங்களைப் பொறுத்தவரைக்கும். அவர்களுக்கு இந்திய தேசத்தின் ஓட்டைகளும் தெரியும் சிறப்புகளும் தெரியும் ஆனால் சிறப்புகளை உங்களிடம் சொன்னால் அவர்களின் பிழைப்பில் மண் விழுந்து விடுமே...//
உண்மைதான் அண்ணா... அமீரகத்தில் பலர் இதுபோல்தான் இருக்கிறார்கள். குறிப்பாக மலையாளிகள்... நம்மவர்களைப் போட்டுக் கொடுத்து வாழும் வாழ்க்கை முறைக்கு மாறியிருக்கிறார்கள்.
நம் மண்... நம் மக்கள்... நம் நாடு என்று வாழ்வோம்...
இந்தியர் என்பதில் பெருமை மட்டும் கொள்ளாமல் மார் தட்டிச் சொல்வோம் நாம் இந்தியன் என்று.
sakthi said…
தேவா வெகுவாய் ஈர்த்தது இப்பதிவு

இந்த தேசத்தின் மீது நீங்கள் கொண்டிருக்கும் மரியாதை எனக்கு மலைப்பை தருகின்றது

வாழ்த்துக்கள் தேவா
அண்ணா ரொம்ப தெளிவா அவர் கிட்ட சொல்லிருக்கீங்க அண்ணா.
ஆனா தவறு அவர் மேல மட்டும் இல்ல. அவர் மனசுல அப்படி ஒரு என்னத்தை ஏற்ப்படுத்திய நம்ம மக்கள் மீதும் தான் .. உங்க பதிவுல எனக்கு இதுவும் ரொம்ப பிடிச்சிருக்கு.
நம் கலாச்சாரத்தை சரியாக புரிந்து கொண்டவர்கள் குறைவு....
நீங்கள் சரியான விதத்தில் உணர்த்தி உள்ளீர்கள் .....
GOOD TO HEAR THIS KIND OF NEWS :)
மென்மையா அதேசமயம் உறுதியா உங்க கருத்துக்களை தெளிவா சொல்லியிருக்கீங்க! தவறான கண்ணோட்டங்களை உருவாக்குவதில் நம்மவர்களின் பங்கும் இருப்பது வேதனைக்குரியது!
karthikkumar said…
நீங்கள் சொல்வது போல சில நம்மவர்களே நம் பெருமை பற்றி பேசுவதில்லை அண்ணா... உங்கள் எழுத்துகளில் இதை படிக்கும்போது நம் பெருமைகள்தான் எனக்கு இப்போது கண்முன் விரிகின்றது... நன்றி அண்ணா... மிக நல்ல பதிவு....:))
ஹேமா said…
நம்மவரின் சில அடிப்படையான குணங்களே நம்மிடம் திறமைகள் இருந்தும் இழிவுபடக் காரணம்.அதைப் அழகாகப் பொறுமையாகப் புரிய வைத்திருக்கிறீர்கள்.துணிவு பாராட்டத்தக்கது தேவா !
மிக அருமையான பதிவு .
அயல் நாட்டில் வாழும் இந்தியர்கள் மட்டுமல்ல, இந்தியாவில் வாழும் இந்தியர்களே, வெளிநாட்டவர்களிடம் பேசும் போது எங்க நாட்ல இப்டி தாங்க, எதுவுமே சரியா இருக்காது, ஹார்ன் அடிக்காம வண்டி ஓட்ட மாட்டாங்க, எச்சி துப்புவாங்க, கண்ட இடத்துல குப்பை போடுவாங்கன்னு குறை பட்டியல் சொல்லுறாங்க. சரி அவங்க சொன்ன குறைகள எல்லாம் அவங்களாச்சும் செய்யாம இருக்காங்களான்னா, அதுவும் இல்ல. மாற்றம் என்பது தங்களிடம் இருந்து வர வேண்டும் என்பதை உணராத வரை இதில் யாரையும் குறை சொல்லி பிரயோசனமில்லை. நான் இதுவரை என் நாட்டை வேறு யாரிடமும் விட்டுக்கொடுத்துப் பேசியதில்லை. என் நாட்டைக் கிண்டலடித்தால் மூஞ்சில அடிக்கத்தான் போயிருக்கேன் . என் நாட்டில் 1000 குறைகள் இருந்தாலும், அது என் தாய்நாடு, அதை குறை சொல்ல உனக்கு உரிமையில்லை அப்டின்னு தான் சொல்லுவேன்.
Kousalya Raj said…
மிக அழகான தெளிவான அறிவுறுத்தல்கள். இந்த பதிவை வாசிக்கும் போதே உணரமுடிகிறது நமது பண்பு என்ன என்பதை !

குறை சொல்வது சுலபம்...குறை சொல்பவர்களால் அதற்கு ஒரு நல்ல தீர்வை கூற முடியுமா என்றால் குறைசொல்பவர்களிடம் இருந்து பதில் வருவது இல்லை.

குறைகளை பெரிது படுத்திவிட்டு நிறைகளை மறந்துவிடுகிறோம்...இது நம்மோட சாபக்கேடு போல.

//ஒரு தாயை, அவளின் தாய்மையை, அன்பை உணரத்தான் வேண்டும்....மாறாக ஆராய்ந்து பகுத்துப் பார்த்தால் அங்கே என்ன மிஞ்சும்//

நம் மாண்பை குறைத்து பேசுகிறவர்களுக்கு இதை விட சிறந்த உதாரணம் வேற சொல்ல முடியாது.

எப்போது தாய்நாடு திரும்புவோம் என்ற எண்ணத்தில் வாழும் பலருக்கும் தெரியும், புரியும்...இந்தியாவில் என்ன இருக்கிறது என்று ?!

ஜோசப் சார் சொல்வது போல் இங்கே இருந்துகொண்டே நாட்டை குறைசொல்லி பேசுபவர்கள் மிக அதிகம்.

நம் தேசத்தை முழுமனதாய் நேசிப்போம்...(கிரிகெட் போட்டி நடக்கும் போது மட்டும் அல்ல )அப்போது குறைகள் சொல்ல மனம் வராது.

உங்களின் மிக சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று. நன்றி.

வாழ்த்துக்கள்.
Kousalya Raj said…
டிரைலர் லிங்க் அனைத்தையும் இங்கே கொடுத்து இருந்தால் ஏற்கனவே அவற்றை படிக்காதவர்களுக்கு வசதியாக இருக்கும்.
dheva said…
//டிரைலர் லிங்க் அனைத்தையும் இங்கே கொடுத்து இருந்தால் ஏற்கனவே அவற்றை படிக்காதவர்களுக்கு வசதியாக இருக்கும்//

கெளசல்யா @ கொடுத்தாச்சு.....!
யப்போ எவ்வளவு பெரிய பதிவு? எப்படி சார் இப்படி எழுதுகிறீர்கள்?
அயலகத்தில் பணிபுரியும் எனக்கும் தங்களுக்கு நேர்ந்ததைப்போன்ற அனுபவங்கள் நிகழ்ந்ததுண்டு. தனித்திறன் இல்லாதவர்கள் எவருடைய ஆதரவினாலோ அல்லது குருட்டாந்தர அதிர்ஷ்டத்தினாலோ இயல்பான அவருடைய தகுதிக்கும் மீறி மேலான பதவிக் கிடைத்திடவே, அதனை தக்கவைக்கும் பொருட்டு நம்மவர்களையே இழிவுபடுத்தி தனக்கு மேலானவர்களை குளிரூட்டுவதாகக் கருதி இக் கொச்சையான இழிச் செயலை புரிகின்றனர். இதில் உயர்நிலை, இளநிலை என்று மட்டுமல்ல கீழ்நிலையிலுள்ள தொழிலாளர்களும் ஈடுபடுவதுதான் வேதனையான உண்மை. 'பிழைப்பிற்காக அயலகம் வந்த நாம் நமக்குள்ளே பிளவு படலாமா' எனும் சிந்தனையுள்ளவர்களும் குறிப்பிடத்தக்க விழுக்காட்டில் உண்டு. வளைகுடா என்பது மேற்கத்திய நாடுகளைப்போல் குடியுரிமைப்பெறுவது இயலாத ஒன்று. என்றேனும் ஒருநாள், நாம் கட்டாயம் நமது தாயகம் திரும்பியே ஆக வேண்டும். இடைப்பட்ட காலத்தினில் எதற்கிந்த சிறுமை(பிள்ளை)த் தனம்?
அந்த படத்தை எடுத்தது கருவாயன் என்கிற சுரேஷ் பாபு. அவருக்குண்டான க்ரெடிட் தருவது தான் நியாயமான செயல்.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த