Skip to main content

தமிழா.....என் தமிழா!

























ஒரு துள்ளலோட இருக்க வேணாமா இளைஞர்கள் கூட்டம்...? அது ஏன் அரசியல் கட்சிகளுக்குள்ள போயி தஞ்சம் அடைஞ்சுகிட்டு தன்னோட கட்டற்ற ஆற்றலை ஏதோ ஒரு விசயத்துக்குள்ள கட்டுப்படுத்தி வச்சுக்கணும்னு ஸ்ட்ரெய்ட்டா கேட்டுட்டே இதுக்கு மேல கண்டினியூ பண்றேன்...!

எந்த அரசியல் கட்சியையும் சாரமால் ஒரு ஜனநாயக நாட்ல வாழ முடியாது தாங்க!ஒத்துக்குறேன். பட்.... ஏன் ஒரு கட்சியையும் ஏதோ ஒரு தலைவனையும் புடிச்சு கிட்டு எப்பவுமே தொங்கணும்னு கேக்குறேன்?

சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி யாரு எப்போ நல்லது செய்றாங்களோ அப்போ அவுங்களுக்கு மாலைய போட்டுட்டு.... தப்பு பண்ணும் போது நீங்க செய்றது தப்புன்னு சொல்லக் கூட நம்மளால முடியாதா என்ன? நல்லவன் கெட்டவன்னு ஒருத்தரை முடிவு பண்ண எப்பவும் அளவு கோலா நமக்கு அவுங்களால கிடைக்கிற வசதிகள வச்சுக்குறது எப்படிங்க நியாயம் ஆகும்....?

நம்ம தேவைகள் என்ன? சமுதாயத்தின் தேவைகள் என்னனு பகுத்துப் பாத்து நமது விருப்பு வெறுப்புகளை முடிவு பண்ற ஒரு சக்தி ஏன் நம்ம மக்களுக்கு வர்றது கிடையாதுன்னு நினைக்கும் போது கொஞ்சம் வருத்தமாதான் இருக்கு.

ஏதோ ஒரு விசயம் நமக்கு மட்டும் நன்மையா இருக்கும், மிச்ச இருக்குற எல்லோரும் எக்கேடோ கெட்டுப் போகட்டும்னு ஒரு நிலைப்பாட்டுக்கு வர்றதாலதான்....அரசியல்வாதிங்களையும் அதிகாரத்தையும் வச்சிகிட்டு நமக்கு தேவையான, சாதகமான விசயங்களையும் சாதிச்சுகிறோம். இந்த பொழப்பு பொழச்சதுக்கு ரொம்ப நாணயமா, விசுவாசமா அந்த கட்சிக்கும்,தலைவனுக்கும் அல்லது யாரோ ஒரு அதிகாரிக்கும் விசுவாசம்ன்ற பேர்ல கொடி பிடிக்கிறதையும் செய்றோம்...

நேர்மையா நாம பொழைக்கிற பொழப்புக்கு கூலி கெடச்சா போதாதா..? குறுக்கு வழியில போயி காரியம் சாதிக்கிறத மக்களாகிய நாம் நிறுத்தும் போது ஆட்டோ மேட்டிக்கா அதிகாரவர்க்கத்துக்கு வேலை இல்லாம தானே போயிடுது தானே...? இதை ஏன் சராசரியா இருக்குற மக்கள் நினைக்கிறது இல்லை...? எதுக்கும் பொறுமையில்லாத ஒரு ஜனக்கூட்டமா நாம போய்ட்டோமேன்னு நினைக்கும் போது இது எங்க போயி முடியும்னும் தெரியலை...

எல்லாம் போகட்டும் நிம்மதியா இருக்கலாம்னு ஒரு கோயிலுக்கு சாமி கும்பிடப் போலாம்னா அங்க க்யூவில நின்னு பாக்க பொறுமையில்லாம உள்ள போயி சாமி கிட்டக்க பாக்க ஸ்பெசல் தரிசனம், மண்ணாங்கட்டி, எள்ளுப் புண்ணாக்குன்னு போர்டு வேற....?

ஏய்யா தெரியாமத்தான் கேக்குறேன்.. கடவுள காசு கொடுத்து கொடுத்து கிட்டக்க காண்பிச்சு அல்லது பாத்து என்ன மாற்றத்தை கண்டுபுட்டீங்க நீங்க? இன்னும் சொல்லப் போன வெக்கமே இல்லையா உங்களுக்கு எல்லாம்....வழிபாடு நடத்த வந்த இடத்துல போயி எக்ஸ்ட்ரா காசு கொடுத்து குறுக்கு வழியில போயி வழிபடுறோமேன்னு...

எங்கே எங்கே இருந்தோ வருவாங்க...அடிச்சு புடிச்சு காசு கொடுத்து கருவறைக்கு கிட்டக்க போயி நின்னுகிட்டு கண்ண மூடிக்கிடுவாங்க..!!!!? அட இதைப் பாக்கத்தனே இம்புட்டு அல்லல் பட்டு வந்தீங்க.... அதுகிட்ட போயிகிட்டு ஏன் கண்ணை மூடி சாமி கும்புடுவானே? கண்ண திறந்து ரஜினிகாந்த் படத்தை சினிமாஸ்கோப்ல பாக்குற மாதிரி பாக்க வேண்டியதுதானேன்னு கேட்டா அவுங்களுக்கு கோவம் வேற வருது.....

அப்ப நீ தேடிகிட்டு இருக்கறது வெளியில இல்ல அப்பு...அது உன் உள்ள இருக்குன்னு சொன்னா? எனக்குள்ள என்ன இருக்கு கல்லீரலும், கணையமும், இதயமும் குடலும்தான் இருக்குனு சொல்லிக்கிட்டு தங்கள மேதாவிங்கன்னு சொல்லிக்கிற ஞான சூனியங்கள என்ன செய்யச் சொல்றீங்க?

உலத்துல இருக்க எல்லா அறிவும் எனக்கு வரணும் ஆனா உடனடியா வரணும் அவன் மிகப்பெரிய எலக்கியவாதியாவோ அல்லது கருத்து கந்தசாமியாவோ ஆகணும். பறக்குற காக்கா குருவில இருந்து, ஏரப்பிளேன், ராக்கெட், அறிவியல், விஞ்ஞானி, அரசியல்வாதி, வரலாறு, புவியியல், விஞ்ஞானம், இப்படி எல்லா கருமத்தையும் விமர்சிக்கணும் ஆனா எந்த விசயத்தையும் முழுசா தெரிஞ்சுக்க விருப்பமில்லை...என்ன செய்யலாம்னு ஒருத்தன் என்கிட்ட கேட்டான்...

அட டே...அது ஒண்ணும் பெரிய கஷ்டம் இல்லப்பு...நீங்க பேசுறத ஒலகமே கேக்குதோ இல்லையோ, உங்க அறிவு எத்தனை டன்னுன்னு கூட நீங்க ஒண்ணும் கவலைப் பட்டுகிடாதீங்க...., உங்களுக்கு உலக வரலாறும் தெரிஞ்சிருக்க வேண்டாம், உள்ளூரு வரலாறும் தெரிஞ்சு இருக்க வேண்டாம், கொஞ்சம் அப்டி இப்டி சில பல பிரபல எழுத்தாளர்களோட பொஸ்தகப் பேருகளும், டெய்லி நியூஸ் பேப்பரு படிக்கிற பழக்கமும் இருந்தா போதும்....மறக்கமா விகடன் மாதிரி பொஸ்தகங்கள் வெளியிடுற எல்லா சப்ளிமென்ட்ரியையும் படிச்சா போதும்....

உடனே ஒரு பிளாக் ஒப்பன் பண்ணுங்க....., தமிழ்ல டைப் பண்றது எப்டீன்னு கூகிள்ள போயி தேடி கத்துக்கோங்க. .பிளாக்ல உங்களுக்கு என்ன, என்ன தோணுதோ எல்லாத்தையும் பொங்கி பொங்கி எழுதுங்க....ஆனா ஒரு முக்கியமான விசயம் நீங்க அடிக்கடி தமிழ் சோப் போட்டு குளிக்கணும்னு சொன்னேன்.

அது என்னங்க தமிழ் சோப்புன்னு கேட்டு கிட்டு மோட்டு வளையத்த பாத்தவரோட தலையில நறுக்குனு கொட்டி சொன்னேன்.....நம்மலாள நடு ரோட்ல கிடக்குற ஒரு செங்க கல்ல எடுத்து ஓரமா போட முடியலேன்னாக்க கூட நாம இராச இராச சோழன் மாதிரியான மன்னர்களை எல்லாம் கன்னா பின்னானு திட்டணும், அப்டி திட்டிகிட்டே அவர் என்ன பெரிய மன்னன்...? அப்புடி என்னத்த பெரிசா சாதிச்சு புட்டாரு? மனு சாஸ்திரப்படி அரசாங்கம் பண்ணிய அவர எப்டி தமிழனா ஏத்துக்க முடியுன்ற ரேஞ்சுல ஆரம்பிச்சு.....

எல்லா இடத்துலயும் நான் தமிழன், நான் தமிழன்னு ச்ச்சும்மா கூவிகின்னே இருக்கணும். தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டுன்னு ச்ச்சும்மா வெளுத்து வாங்கிகிட்டே சில பல போராட்டங்களுக்கு வாலன்டையரா போயி.....நரம்பு புடைக்க பேசணும்...., ஏழாம் அறிவு மாதிரி படங்கள் பாத்துட்டு....போதி தர்மர் என்ன என்ன செஞ்சாரு? அவரோட கான்சப்ட் என்ன? அப்டீன்ற எல்லாத்தையும் தூக்கி கடாசிபுட்டு வருங்கால இளைய தமிழர்களுக்கு அவரு ஒரு குங்பூ மாஸ்டர்னு அறிமுகப்படுத்தி வைக்கணும்...

அப்பத்தானே நாளைக்கு ஒருத்தன் சொல்லுவான்...அட போங்கப்பு போதி தர்மர விட எனக்கு ஜெட்லியத்தான் ரொம்ப பிடிக்கும்னு. அவரு மாறிக்கி இவரு சண்டை போடுவாரா? சும்மா சுவத்த பாத்து ஒன்பது வருசம் ஒக்காந்து இருந்துட்டு தியானம் கியானம்னு பொலம்பி இருக்காரு.... ஜெட்லிதான் ஜூப்பருன்னு அவன் சொல்லுவான்ல....! ஏன்னா இப்பவே நிறைய பேருக்கு போதி தர்மர் ரீச்சான இடம் இப்படித்தான்...அதனால மறக்கமா தமிழ் சோப்பு ஒண்ணு கையிலயே வச்சுக்கோங்கன்னு சொன்னேன்.....

அதுக்கு அவரு அட நீங்க வேற சார் எனக்கு தமிழ் அவ்வளவா வராதே! நம்ம மொழியில எனக்கு அம்புட்டு புலமை ஒண்ணுமில்லையே...தமிழன் தமிழன்னு சொல்லும் போது தமிழ் மொழி பற்றிய அறிவையும் கலாச்சாரத்தையும், அதன் தொன்மையையும், நயத்தையும் தெரிஞ்சுகிட்டு சொன்னாதானுங்களே நல்லா இருக்கும்.

நான் தமிழ்ன்ற ஒரு மொழியப் பத்தியும் அதோட வளத்தை பத்தியும் எல்லாம் தெரிஞ்சுக்காம, ச்ச்சும்மா என் பொழப்ப ஓட்டவும், என்ன சுத்தி கூட்டத்த் சேக்கவும்...ஏற்கனவே என் பாட்டன், முப்பாட்டன் எல்லாம் சாதிச்சுட்டு போய்ட்டானுவோன்னு சொல்லி சொல்லிகிட்டு நான் தெருமுனையில ஒக்காந்தி கொசு அடிச்சா சரியா போயிடும்ங்களான்னு கேட்டாரு....

நான் சொன்னேன்..., அட நீங்க வேற அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் தேவையில்லங்க சீமான் தெரியுமா உங்களுக்கு...? அவர் வச்சிருக்கிற கட்சியோட பேரே நாம் தமிழர். அவருக்கு தமிழ்நாட்ல இருக்குற பெரச்சினைகள் எல்லாமே ஒரு பெரச்சினையும் இல்ல..அதப்பத்தி கண்டுக்கவே மாட்டாப்ல...என்னா அவரு ஒலகத் தமிழர்களுக்காக நாம் தமிழர்னு சொல்லிகிட்டு இருக்க ஆளு...

அவரு அடிக்கடி என் சொந்தங்களே...என் சொந்தங்களேன்னு சொல்லி சீறிகிட்டே இருப்பாரு, ஆனா,நாலடியார்ல நாலு வரி சொல்லச் சொல்லி கேட்டுப் பாருங்க என்ன சொல்றாருனு பாப்போம்...!இருந்தாலும் நாம அவர மதிக்கலையா....அண்ணன் வரும் போதே.. கூட்டமே இல்லையினாக் கூட கூட ஏய் தள்ளு தள்ளுன்னு சொல்லிகிட்டு வழி விடச் சொல்றது இல்லையா..

அது மாதிரி ஏதாச்சும் செஞ்சுகிட்டு இருந்தா போதும்...! அவரு மட்டுமில்ல இன்னும் தமிழ்நாட்ல இருக்குற அரசியல் வாதிங்க எல்லோருமே இந்த தமிழ் சோப்பு போட்டு குளிக்கிறவங்கதான்......! இந்த தமிழ் சோப்பு போட்டு குளிச்சு, குளிச்சு ஒடம்பு புண்ணாப் போயி கடக்குற ஒரு கட்சி திமுக...! இப்ப புடிச்சாலும் புடிக்காட்டியும் தமிழ் சோப்பு போட்டு குளிச்சாத்தான் பொழப்பை ஓட்ட முடியும்னு நம்பி போட்டு குளிக்க ஆரம்பிச்சு இருக்க கட்சி அதிமுக..அவ்ளோதானேன்னு சொல்லி அவர வெற்றிகரமான பெரபலம் ஆக வாழ்த்தி அனுப்பிச்சு விட்டேன்.......!

ஆமாங்க...நான் மேலே சொன்னது எல்லாம் சரிதானே...?எம்புட்டுதான் ஒங்களுக்கு தமிழ் மேலயும் மக்கள் மேலயும் விசுவாசம் இருந்தாலும் கம்ம்னு இருந்துடக் கூடாது. நீங்க அக்னிய கண்டு பிடிங்க, அணு விஞ்ஞானியா இருங்க....இந்திய தேசத்தின் ஜனாதிபதியா இருந்து இந்தியாவையே திரும்பிப் பாக்க வைச்ச அப்துல் கலாமா கூட இருங்க....

நீங்க செஞ்ச செயல்களின் விளைவுகள், கனவுகாணுங்கள்னு மாணவர்களை சந்திச்சு இளைய இந்தியாவை உருவாக்கப் பாடுபடுறது, இந்தியா 2020ன்னு கனவு காண்கிறது எல்லாம் மொத்த வேஸ்ட்....

கொரலு கொடுக்கணும்....! டி.ராஜேந்தர் மாதிரி தமிழன்....நான் தமிழன்னு சொல்லிகிட்டே இருக்கணும் அப்டி இல்லண்ணா நீங்க தமிழினத் தொரோகி ஆயிடுவீங்க சாக்கிரதை..! என்னமோ போங்க......50 வருசமா மாத்தி மாத்தி இந்த திராவிடக் கட்சிகள் எல்லாம் தமிழ் நாட்ட ஆண்டு, ஆண்டு நிமித்துன நிமித்துல...சென்னை மாதிரி சிட்டிங்கள்ள கூட குண்டும் குழியுமா ரோடுகளும், வடிகால் இல்லாததால் பள்ளங்களும் ஏற்பட்டுதான் போயி கிடக்குன்னு நான் ஏன் கவலைப்படணும்னு நீங்க நினைக்கிற மைண்ட் வாய்ஸ் நல்லா எனக்கு கேட்டுருச்சு.....

ஆமா...! செப்டம்பர்ல இருந்து டிசம்பர் வரைக்கும் தான மழை தண்ணி எல்லாம், இந்த மூணு மாசம் மட்டும் பொது மக்களாகிய நாங்க தெருவுல நின்னு எவனாச்சும் ஒரு சாட்டிலைட் டிவி சானல் காரன் வருவான், அவன் கிட்ட தெருவெல்லாம் தண்ணி, கவர்மெண்டு ஒண்ணும் செய்யலன்னு ஒரு பாடு பொழம்பிட்டு போய்கிட்டே இருக்கப் போறீங்க...! தேர்தல் நேரத்துல அரசியல்வாதிங்களும் சிங்கார சென்னையா மாத்துவோம் சிங்கப்பூரா மாத்துவோம்னு சொல்லிகிட்டு பல்ல இளிச்சுக் கிட்டு வந்து ஓட்டு கேட்கப் போறாங்க....

என்ன போன வாட்டி திமுகவுக்கு போட்டோம்....ஓவார ஆடிட்டாய்ங்க.... இறக்கிட்டோம்னு சொல்லிட்டு அதிமுகவ இந்த தடவ ஜெயிக்க வச்சு இருக்கீங்க..இப்பத்தான் ஆத்தா அலமேலு ஜதி சொல்லி ஆட ஆரம்பிச்சு இருக்கு...இந்த அஞ்சு வருசம் முடிஞ்ச பின்னாடி....ஓவர ஆடினாங்கன்னு சொல்லி இறக்கிட்டோம்னு சொல்லிட்டு அதிமுகவை இறக்கி விட்டுட்டு, திமுக கையில ஆட்சிய கொடுப்பீங்க......அவ்ளோதானே

என்ன பாஸ் இது கூட தெரியாதா எங்களுக்கு..........?

என்னைய மாதிரி எவனாச்சும் ஒரு கேன இப்டி எழுதிட்டு போய்கிட்டே இருப்பான் நீங்க ஒண்ணியும் கண்டுக்காதீங்க....ஆயிரம் இருந்தாலும் நம்ம பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் தமிழன்கிற உணர்வையும் விட்டுக் கொடுக்க முடியுமா....?

காலத்துக்கும் பாட்டன் பூட்டன் செஞ்சு வச்சதை பத்தியே பெருமை பேசிட்டு, நாம் ஒண்ணும் புதுசா செய்யாம வரப் போற தலைமுறைகள் எல்லாம் சொல்லி பெருமைப்பட்டுக்கிற அள்வுக்கு ஒண்ணும் செய்யாம, வாழ்க...ஒழிக இந்த ரெண்டுக்கும் நடுவுல வாழ்ந்துட்டு செத்துப் போய்டுவோம்...

இதையே தொடர்ந்து கண்டினியூ பண்ணுவோம்......எதிர்காலம் ரொம்ப பிரகாசமா இருக்கும்!

அப்போ வர்ர்ர்ர்ட்ட்ட்டா......!


தேவா. S




Comments

Prabu Krishna said…
ஹி ஹி ஹி

அப்போ நான் உங்கள புடிச்சி சண்டைக்கு இழுக்கணும் அப்போதானே நானும் தமிழன்?

அட சும்மாவே இருந்து போரடிக்குதே இந்த தமிழனுக்கு.
நமது தேவா அண்ணா...

வாழ்க...

#ஹா ஹா ஹா... அருமை...

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த