Skip to main content

Posts

Showing posts from 2015

சிம்ம சொப்பனமான பாடலும், சிம்புவும்...!

எவ்வளவோ திறமைகள் தன்னிடம் இருந்தும், திடமான குடும்பப் பின்னணி இருந்தும் விளையாட்டுத்தனத்தால் சரியான சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும் சிம்புவைப் பார்த்தால் பாவமாய்த்தானிருக்கிறது. தெருவில் நடந்து சென்றால் வீதிக்கு நாலு பேரின் வாயிலிருந்தாவது சிம்பு பிரயோகம் செய்த வார்த்தை வந்து வெளியே விழும்தான்,, என்னதான் மேல் தட்டு வர்க்கமென்றும், நடுத்தர வர்க்கமென்றும் எக்ஸ்ட்ரா டீசண்ட்டாய் பொதுவெளியில் வெள்ளைச் சட்டை போட்டு திரியும் மனிதர்களும் கூட கோபம் கொப்பளித்தால் உடனே உச்சரிக்க கூடிய வார்த்தைதான் என்றாலும்... ஒரு திரைப்படக் கலைஞராய் பொதுவெளியில் எல்லோரும் அறிந்தவராய் இருக்கும் சிம்பு விளையாட்டாய் பாடி வீட்டுக்குள் பத்திரமாய் வைத்திருந்த பாடலை காக்கா தூக்கிக் கொண்டு வந்து இணையத்தில் போட்டு விட்டது என்று சொல்லும் கதை கேட்பதற்கு நன்றாய்த்தானிருக்கிறது.  விளையாட்டுத்தனமாய் பாடியது வீட்டுக்குள்ளேயே இருந்திருந்தால் இந்த விபரீத வினை அவருக்கு வந்திருக்கவே வந்திருக்காதுதான் என்பதோடு மட்டுமில்லாமல் அவர் வீட்டுக்குல்ளேயே அந்தப் பாடல் இருந்திருந்தால் அதைப்பற்றி பேச என்ன இருக்கிறது மக்களுக்கு...?

அது அங்கேதானிருக்கிறது...!

எழுதுவதென்பது எதுவுமில்லை. அது தன்னைத் தானே வெறுமையாக்கிக் கொள்ளல். கருத்துக்களை விட்டு வெளியே வரும் ஒரு யுத்தி. யாருமற்ற பெருவெளியில் தன் காலடி ஓசையை மட்டும் கேட்டபடி நடக்கும் பிரக்ஞை நிலை. கோட்பாடுகளில்லா ஒரு தவம். இதுதான் இன்னதுதானென்று ஒரு நாளும் வரையறுத்துக் கொள்ள முடியாத வரையறுத்து சொல்ல முடியாத சூன்யம். இருத்தல் மட்டுமே சத்தியமென்பதை உணர்ந்தபடி ஒன்றுமில்லாததை எழுதிக் கொண்டிருக்கிறேனே இப்போது, அதை வாசித்துக் கொண்டிருக்கிறீர்களே, இல்லாமல் இருக்கும் காலத்தைப் போன்று அசைவற்றுப் போய் அதை தான் எழுத்து அதிகபட்சமாய் செய்ய முயலும் அல்லது முடியும். ஏதோ ஒன்றை சொல்ல முயலும் எல்லா முயற்சிகளையும் அறுத்தெறிந்து விட்டு ஒரு முற்று புள்ளியோடு முடிந்து போகும் எழுத்துக்கள் எல்லாம் நிஜத்தில் அதோடு முடிந்து போய்விட்டதென்றுதானா நீங்கள் கருதுகிறீர்கள்...? எங்கிருந்ததோ அது... அது அங்கேதான் இருக்கிறது இன்னும் எப்போதுமிருந்தது போலவே அது இங்கும்தானிருக்கிறது என்றறியும் போது பிறக்கும் தெளிவினைத்தான் காலம் காலமாக சித்தார்த்தர்களுக்கு எடுத்தியம்பிக் கொண்டிருக்கின்றன போதிமரங்கள்..., போதும்

மெலுகா - சிவா த வாரியர் 0.1

காட்டெருமைகளின் எலும்பில் பக்குவமான சிறு குழல்களை எடுத்துதான் இந்த புகைக்கும் குழல்களை உருவாக்குகிறார்கள். புகையிலை நிரப்பப்பட்ட குழலை எடுத்து மெல்ல உறிஞ்சினேன். ஆழமாக நுரையீரலைத் தொட்டுப் பரவி இரத்த் திசுக்களில் பரவிய அந்த சிறு போதை மூளைக்குள் சென்று மனதை மெல்ல மெல்ல அடக்கியது. இதமான காற்றில்  நடனமாடிக் கொண்டிருந்த மானசோரவர் ஏரியை பார்த்துக் கொண்டிருந்தேன். கவலைகள் ஏதுமின்றி பிராயத்தில் நடக்க ஆரம்பித்திருந்த சிறு பிள்ளை நீரைக் கண்டவுடன் கால் பதித்து ஆடும் நர்த்தனத்தைப் போல அது மிதந்து ஆடிக் கொண்டிருந்தது. இன்னதுதானென்று தெரியாத ஒரு சோர்வும் கவலையும் என்னை ஆட்கொள்ளும் போதெல்லாம் இப்போது நினைவுக்கு கொண்டு வர முயன்று கொண்டிருக்கிறேனே என் பால்யப் பிராயம் அதைத்தான் மீட்டெடுத்துக் கொண்டு வந்து மீண்டும் உற்சாகத்தை எனக்குள் உயிர்ப்பித்துக் கொள்வேன்.... மாலைச் சூரியன் வேறொரு திசையில் உந்தி எழுவதற்காக மெல்ல மெல்ல என் தேசத்தின் பனிப்பிரதேசத்து மலைகளுக்குள் விழுந்து கொண்டிருந்தான். செஞ்சிவப்பான வானம் மானசோரவரில் விழுந்து கிடந்ததைப் பார்த்த பொழுது யாரோ தாம்பூலத்தை மென்று துப்பியிருந்தது

காதல் நர்த்தனம்...!

காதல் கவிதையென்று அவள் எழுதிக் கொடுத்த காகிதத்திலிருந்து ஒவ்வொரு சொல்லாய் பெயர்த்தெடுத்து உடைத்துப் பார்க்கிறேன் அது கண்ணீராலும் வலியாலும் நிரம்பிக் கிடக்கிறது.. காதல் கவிதையென்று சொன்னாயே... என்றவளிடம் கேட்டதற்கு கண்ணீரும் வலியும் இல்லாமல் காதல் என்ன வேண்டிக்கிடக்கிறது உனக்கு காதல்...என்று கோபமாய் முகம் திருப்பிக் கொண்ட அந்தக் கணதில் காகிதத்திலிருந்து எழுந்து... நர்த்தனமாடத் தொடங்கி இருந்தது காதல்..! தேவா சுப்பையா...

கனவுகள் வாங்குவன்...!

கனவுகள் நன்றாயிருக்கின்றன நிஜத்தினை விட என்றெண்ணிதான் கனவுகளை சீசாக்களில் பிடித்து வளர்க்கத் தொடங்கினேன்... முந்தா நாள் கண்ட அந்த கனவினையும் சேர்த்து ஆயிற்று மொத்தம் லட்சத்து நாற்பதாயிரம் எதார்த்தங்கள் கோரப்பற்களால் உயிர் குடிக்க முற்படும்போதும் நிகழ்காலம் துரோகக் கத்தியை கூர் தீட்டி வன்மம் கொள்ளும் போதும் யோசித்துபார்க்கவே முடியாத அபத்தங்கள் மூச்சைப் பிடித்து கழுத்தை நெரிக்கும் போதும் ஒவ்வொரு சீசாக்களாய் திறந்து என் கனவுகள் விடுவித்து அவை சொல்லும் கதைகளை கேட்டுக்  கேட்டு என்னை மீட்டெடுத்துக் கொள்வதுமுண்டு... நாளையும்  எனக்கு வேறொரு கனவு வரும்.... என்ற கனவோடுதான் நித்தம் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறேன் இந்த நிதர்சனமற்ற அரக்க வாழ்க்கையொடு...! தேவா சுப்பையா...

மழை என்னவோ மழைதான்...

மழை பெய்த நாளின் அடுத்த நாளில் ஓய்ந்து கிடக்கும் வானம் தெருவெங்கும் தேங்கிக் கிடக்கும் நீரில் விழுந்து கிடக்கிறது முட்டிக்கால் வரை தூக்கிச் சுருட்டிய உடைகளோடு வானத்தின் மீதேறி மிதித்து நடந்து செல்கிறார்கள் மனிதர்கள் மழையை சபித்தபடி..., வீட்டுக்கூரையையும் தெருவையும் நனைத்தவிட்டு கணுக்கால் வரை தேங்கிக் கிடக்கும் மழையிடம் யாதொரு பிணக்குமில்லை அவர்களுக்கு, மழைக்கும் தெரிவதில்லை தான் வாசல் வரை மட்டும் வந்து செல்லக் கூடிய விருந்தாளி என்று, இது புரியாமலேயே விரும்புகிறார்கள் மனிதர்களென்று வீட்டு அடுக்களை வரை எட்டிப்பார்த்துவிட்டு மனிதர்களின் சலிப்பினையும் வெறுப்பினையும் பரிசாய் வாங்கிக் கொண்டு கோடையில் கொளுத்தும் வெயிலில் மீண்டும் என்னைத் தேடுவீர்கள்தானே... அப்போது பார்த்துக் கொள்கிறேன் கடிந்தபடியே உறிஞ்சும் வரை மெளனமாய் படுத்துக் கிடக்கிறது பூமி மீது... அடித்துப் பெய்தாலும் அழித்துக் கொன்றாலும் மழை என்னவோ மழைதான்... அதற்கென்ன மனதா இருக்கிறது... ஆனால் மனிதர்கள்தான்.... தேவா சுப்பையா...

துளசி...!

துளசியும் நானும் காதலித்தோம் திருமணம் செய்து கொண்டோம் எங்களுக்குப் பிள்ளைகள் பிறந்தன ஒரு நாள் எதிர்பாராமல் வழியில் சந்தித்தும் கொண்டோம் அவள் கணவனுக்கு என்னை அறிமுகம் செய்தது போலே நானும் என் மனைவியை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தேன்... பின் விடைபெற்றுக் கொண்ட அந்த நாளின் மதியத்தில் துளசி என்னிடம் தொலைபேசியில் இன்னும்தான் உன்னை காதலிக்கிறேன் என்றாள்... நானும்தான் காதலிக்கிறேன் என்று சொல்லாமல் அலைபேசியை வைத்தது என்னமோ இன்னமும் வலித்துத் தொலைக்கிறது...! தேவா சுப்பையா..

சப்தத்தின் மெளனம்...!

மழை வரும் போலிருக்கிறதே என்று யோசித்தபடியே ஜன்னலை நன்றாக திறந்து வைத்தேன். வீட்டில் அமர்ந்து வேலை செய்வதில் இருக்கும் சுகமே தனிதான். ஒய்வாய் இருப்பது போலவும் தோன்றும் வேலை செய்வது போலவும் தோன்றும் ஒரு அற்புதமான காம்போ அது. வருங்காலங்களில் யாரும் அலுவலகம் சென்று வேலை செய்யும் ஒரு செக்கு மாட்டு வாழ்வு இருக்காது என்று யோசிதுக் கொண்டிருந்த போதே  மேசை மீதிருந்த காபியில் ஆவி பறந்து  என்னை எடுத்து குடிக்கிறாயா என்று செல்லமாய் மிரட்டிக் கொண்டிருந்தது. சிறு சாரல் மழையும், சூடான காபியும் என்னை சொடக்குப் போட்டு இந்த பூமி விட்டு வேறு கிரகம் நாம் செல்ல வேண்டாமா என்று கேள்வி கேட்க.... பார்த்திக் கொண்டிருந்த வேலையைப் பாதியிலேயே நிறுத்தி விட்டு... லேப் டாப்பை மூடி வைத்தேன்.... ஏண்டா மழை பெய்ற மாதிரி இருக்கு இப்போ வண்டிய எடுத்துக்கிட்டு எங்க கிளம்பிட்ட பத்தாக் குறைக்கு கேமரா வேற எடுத்துட்டுப் போற....? வாசலில் நின்று அன்பைக் கண்டிப்பாய் மாற்ற முயன்று தோற்றுக் கொண்டிருந்த அம்மாவைப் பார்துப் புன்னகைத்தபடியே...மழை பெய்யப் போகுதும்மா அதான் கிளம்புறேன் என்று நான் சொன்னதைக் கேட்டு தலையிலடி

அஜித் என்னும் வேதாளம்...!

செம்ம ஹாட்டான மட்டன் தம் பிரியாணி ஆர்டர் பண்ணி சாப்டுக்கிட்டு இருக்கும் போதே இது சாம்பார் சாதம் மாதிரி இல்லை, ரசம் போட்டு கை நொறுங்க அள்ளித் திங்கற மாதிரி இல்லையேன்னு யோசிச்சா அது எப்டி அபத்தமோ அப்டியான அபத்தம்தான் வேதாளம் பார்க்க போய் உக்காந்துக்கிட்டு அதுல லாஜிக் பத்தி எல்லாம் யோசிக்கிறது. தமிழ் சினிமா மரபுல ஹீரோக்கள் எல்லாம் சூப்பர் ஹீரோக்களா தங்கள மாத்திக்கதான் எப்பவுமே முயற்சி செஞ்சுட்டு இருக்காங்க. சூப்பர் ஹீரோவா ரசிகர்களோட மனசுல உக்காந்துட்டா போதும் அதுக்கப்புறம் அவுங்க என்னா செஞ்சாலும் அதை மக்கள் ஏத்துகிடத்தான் செய்வாங்கன்றது உண்மைனாலும் ஒரு ஹீரோ தன்னை சூப்பர் ஹீரோவா பரிணமிச்சு திரையில தன்னை மிகப்பெரிய ஆளுமையா காட்டி அதை அப்டியே ஆடியன்ஸ ஏத்துக்க வைக்கிறதுங்கறதுதான் ரொம்ப ரொம்ப கஷ்டமான வேலை. இந்த ட்ரான்ஸ்மிஷன மிகத்துல்லியமா செஞ்சுட்டா காலத்துக்கும் அவுங்கள எல்லாத்  தரப்பு ரசிகர்களும் விரும்பிப் பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க. எம்.ஜி.ஆர்க்கு நடந்த அந்த ட்ரான்ஸ்மிஷன் ரஜினிக்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னாடி நடந்து இன்னிக்கு தேதி வரைக்கும் திரையில ரஜினி வந்தாலே பார்த்துக

நீர்க்குமிழி..!

ஒரு மழை விட்டும் விடாத மாலைப் பொழுதில் நான் இறங்கி நடக்க ஆரம்பிக்கிறேன் குளிரும் சிறு தூறலும் என்னை ஏதோ செய்யத் தொடங்கிய அந்தக் கணத்தில்தான் தூரத்தில் நடந்து வருவது நீயாய் இருக்குமோ என்று யோசித்துக் கொண்டிருக்கையிலேயே என்னை நெருங்கி விட்டாய் நீ சடக்கென்று தலைகுனிந்து கொண்டேன் உன்னை நேருக்கு நேர் எப்படி நான் யாரோவாய் பார்த்து செல்வது...? ஒரு கணம் என்னருகில் வந்து நீ நிற்பது போலத்தெரிகிறது இருந்தாலும் நான் நடந்து கொண்டிருக்கிறேன் உன்னைக் கடந்து சென்று விட்டேன் நி நின்று கொண்டிருக்கலாம் சென்றிருக்கலாம் அல்லது என்னோடு நடந்து கூட பின்னாலேயே வந்து கொண்டிருக்கலாம் நம்மை யாரோவாக்கி விட்டிருந்த இந்தக் காலம்தான் முன்பொரு நாள் நம்மை சேர்த்தும் வைத்திருந்தது... மழை அடித்துப் பெய்யத் தொடங்கி இருந்தது நடப்பதை நிறுத்தி விட்டு திரும்பிப் பார்க்கிறேன் யாருமில்லாமல் வெறிச்சோடிக் கிடந்த அந்தத் தெருவின் எதோ ஒரு வீட்டிலிருந்து மல்லிகை மொட்டுக்கள் சட் சட்டென்று தங்களைத் திறந்து கொண்டிருக்கின்றன என்று நினைக்கிறேன் மழை வாசமும் மல்லிகை வாசமும் மனதை நிறைக்கத் தொடங்கியிருக்க தொ

யுத்தம்..!

சிறு ஓய்வுக்குப் பிறகெழுந்து உடை தரித்தாயிற்று தலைக்கவசத்தை மனைவி எடுத்துத் தருகிறாள் வாசல் வரை சென்று மீண்டும் வந்து பிள்ளைக்கு முத்தமிடுகையில் மறந்து போன உடைவாளினை எடுத்து இடுப்பில் தரித்துக் கொள்கிறேன் காலையிலிருந்து கால் மாற்றி மாற்றி நின்று கொண்டிருக்கும் என் புரவி கனைத்து என்னை அழைக்கிறது... அதன் கழுத்து தடவி வயிற்றில் கால் உதைத்து கடிவாளம் சொடுக்கி முறுக்குகையில் திமிறி எழுந்து களம் நோக்கி... விரைகிறதென் புரவி, அடுத்தென்ன நிகழுமென்றறியா அதிரகசிய வாழ்க்கையொன்றைப் பருகியபடி சலனமற்று நகருமென் வாழ்வில் நித்தம் நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கிறது முடிவில்லா யுத்தம்...! தேவா சுப்பையா...

யாகத் தீ...!

நான் எழுதிய கவிதைகளை எல்லாம் நீ இப்போது வாசிக்கிறாயா? ஒரு வெறுப்போடுதான் கேட்டேன். அவள் பதிலேதும் சொல்லாமல் அலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள். வெறுமனே நானும் அலைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சப்தமில்லாத அந்த நிமிடங்களை சடக்.. சடக்...சடக் என்று மென்று விழுங்கிய படியே காலம் ஓடிக் கொண்டிருந்ததை பற்றிய பிரக்ஞை எனக்கு அறவே இல்லாதிருந்தது போலத்தான் அவளுக்கும் இருந்திருக்க வேண்டும்... சடாரென்று என்னைப் பார்த்தாள்...கலைந்த கேசத்தைப் பற்றிய யாதொரு அக்கறையுமின்றி என்னை அவள் அப்படி ஊடுருவிப் பார்த்தது எனக்கு ஒரு மாதிரியாய் இருந்தது... நீ ஏன் எதுவுமே எழுதுவது இல்லை இப்போதெல்லாம் என்று அவள் கேட்டது, சடலத்திடம் போய்  ஏன் இறந்து கிடக்கிறாய் என்று கேட்பதைப் போலவே தோன்றியது எனக்கு. நான் எழுதுவதில்லைதான் ஆனால் அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை... ஒவ்வொரு இறகாக பிய்த்துப் போட்டு விட்டது காலம். நான் முன்பு போல தோகை விரிக்க இன்னும் எத்தனை நாள் காத்திருக்க வேண்டும் என்று எனக்குத்  தெரியவில்லை. அகங்காரத்துக்காக எந்த மயிலும் தோகை விரிப்பதில்லை அது அழகியலின் வெளிப்பாடு. இருந்தாலும

மீளல்...!

மீளல் என்பது எப்போதும் கடினம்தான் அது காலத்தை தின்று விடுகிறது சுற்றியிருப்பவர்களுக்கு புரிதலின்மையைக் கொடுக்கிறது வலியோடு நகர வைக்கிறது வார்த்தைகளைக் கொன்று விடுகிறது; பதுங்கித் திரியும் அடிபட்ட புலியின் கொடூரத்தோடு பாய்வதற்கான தருணத்தை அது எதிர்பார்த்து காத்திருக்கிறது; மீளல் ஒரு வேள்விதான் அது எலும்புகளைத் துளையிட்டு ரத்தத்தை உறிஞ்சி  நரம்புகளை அறுத்தெறிந்து  தடாலென்று கீழ் தள்ளி விடும் போதுதான் விழுந்த இடத்திலிருந்து நாம்  எழுந்து விஸ்வரூபமெடுக்க வேண்டியிருக்கிறது மீட்சி அல்லது மீளலென்பது காலம் கையளிக்கும் இடைநிலைச் சூழல்தானென்றாலும் மீளும் வரை மீண்டு கொண்டிருப்பவன் பாவிதான், துரோகிதான்; மீளல் ஒரு சூழ்நிலை மாற்றிதான் அது மீளும் வரை இடதை வலதாக காட்டுகிறது வலதை இடதாகவும் மேலைக் கீழாகவும்  கீழை மேலாகவும் காட்டிக் கொண்டேஇருக்கிறது... மீள்பவனை ஊமையாக்குகிறது; மீள்பவனின் வார்த்தைகளிலிருக்கும்  சத்தியமென்பது விழலுக்கிறைத்த வெற்று நீர்தான்... ஆனாலும்... மீளலொரு நாள் தன்னை மீட்டெடுத்துக் கொள்கிறது கூட்டுப் புழுவினை உடைத்து சிறகசைத்துப் பறக்கும் வண்ணத

ப்ரியப் பெரும் பொழுது....!

எதைப் பார்க்கிறோமோ அதை எப்படி பார்த்தோமோ அப்படியே விளங்கிக் கொண்டு, அது எதுவாக இருக்கிறதோ அதாக புரிந்து கொள்ளுதல் என்பது ஒரு கலை. அபிப்பிராயங்களோடுதான் நாம் ஒவ்வொரு விசயத்தையும் அணுகுகிறோம், ஒன்றை பற்றி விமர்சிக்க அல்லது அதை பற்றி கருத்து சொல்ல நமது விருப்பு வெறுப்புகளையும், ஏமாற்றங்களையும், எதிர்ப்பார்ப்புகளையும் நம்மை அறியாமல் திணித்தே அது பற்றி ஒரு அபிப்பிராயம் கொள்கிறோம். நிஜத்தில் எது எதுவாக இருந்ததோ அல்லது இருக்கிறதோ அது பற்றிய யாதொரு அக்கறைகளுமின்றி தத்தமது மனதில் வரைந்து கொள்ளும் பிம்பங்களாகவே மிகைப்பட்டவர்களின் வாழ்க்கை இங்கே இருக்கிறது. நாம் வெளியே காண்பதும், அது பற்றிய அபிப்பிராயங்களைச் சொல்வதும், நமது சொந்த யோக்கியதையே அன்றி வேறு ஒன்றுமே அல்ல... எதை அறிந்தோமோ அது அறிந்ததன்று.... சத்தியத்திடம் போதனைகளென்றே ஒன்று இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? வெகுளியாய் பூத்துச் சிரிக்கும் பூக்களிடம் சொல்வதற்கு மலர்ச்சியைத் தவிர வேறொன்றுமில்லைதானே....?! மலர்தலும்...காய்ந்து சருகாகி வீழ்தலும் முழுமையில்தானே நிகழ்கிறது...? யார் எழுதி வைத்தார்கள்... இந்த வாழ்க்கைச் சமன

திருத்தப்பட்ட பிழைகள்...!

பள்ளங்களில் இறங்கியும் மேடுகளேற காத்திருந்தும், வளைவுகளின் போக்கிற்கேற்றபடி வளைந்தும் சரேலென்று விழவேண்டிய இடத்தில் அருவியாய் விழுந்தும் எல்லா வித அசெளகர்யங்களையும்  தனது செளகர்யமாக்கிக் கொண்டு நகரும் நதிதான் எத்தனை அழகானது.... வசீகரமானது..!வற்றிப் போனாலும் மீண்டும், மீண்டும் தனது தடங்களில் தன்னை மீட்டெடுத்துக் கொண்டு கடந்த காலத் தழும்புகளை வெளிக்காட்டாமல் உற்சாகமாய் கரை புரண்டோடும் நதியின் வாழ்வோடு எத்தனையோ உயிர்களுக்கு தொடர்பு உண்டுதானே....? நதி என்று ஒன்றும் கிடையாது, நதித்தல் என்ற ஒன்று மட்டுமே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நதியின் பிரவாகத்தில் கணத்திற்கு கணம் அங்கே புதிய வாழ்கை நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஓடிக் கொண்டே இருக்கும் நதியை இதுதான் இன்னதுதான் என்று வரையறை செய்து விட முடியாது, அது நிகழ்ந்து கொண்டிருப்பது, தேங்கிக் கிடப்பதல்ல...அது எப்போது புதியது, சற்று முன் நீங்கள் பார்த்தது அல்ல இப்போது பார்த்துக் கொண்டிருப்பது என்று ஓஷோ சொல்வதைப் போல... நதிகள் வாழ்க்கையின் மையக் கூறினை, அதன் அடித்தளத்தைத் தானே நமக்கு எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கின்றன. எழுதும் போது க

தாய்மை...!

என்னுள் உயிர் துடிக்குமொரு சொப்பனம் கண்டேன்... பால் சுரக்கையில் குறுகுறுக்கும் மார்பெனதாய் இருந்து தேகம் முழுதும் பூரித்திருந்ததப்போது; யான் எனதெண்ணிக் கொள்ளும் மமதை அழிந்து இன்னொரு உயிர் சுமக்கும் பெருமிதத்தில் வீங்கிப் பெருத்திருந்ததென் வயிறப்போது... பசி இரண்டென்றெண்ணி நிறைய உண்டேன்; தாகமிரண்டென்றெண்ணி அதிகம் குடித்தேன்.... தனிமையிலிருந்த போது அதை தவமாய் கருதி கண்மணி என் உயிரோடு வயிறுதடவி பேசிச் சொக்கிக் கொண்டிருக்கையில் பாவியென் சொப்பனம் கலைந்ததென்ன...? இப்பிறவியிலொரு ஆணாய் என்னை மீண்டும் நிலைக்கும் படி ஊழ்வினையென்னைச் சபித்துச் சென்றதென்ன...? எப்பிறப்பில் இனி நான் பெண்ணாவேன்...? என்னுளிருந்தென் சிசு உதைக்கும் சுகமறிவேன்...? கனவாகிப் போன என் கனவாவது வாய்க்குமா மீண்டுமொரு முறை.. இனியென்றெண்ணி ஏக்கத்தில் ஊர்ந்து கொண்டிருக்கிறேன்... இவ்வரிகளினூடே............. தேவா சுப்பையா....

கொட்டுச் சத்தம்...!

எப்போதும் பேசிக் கொண்டே இருக்கும் சுப்ரமணி மாமா சிவனே என்று படுத்துக் கிடந்தார். அத்தையைப் பார்த்தால்தான் பாவமாயிருந்தது. தலையில் அடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தது. பவானியும், பார்கவியும் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள், உறவுகள் எல்லாம் சுற்றி அமர்ந்து இருந்தது அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. மணிதான் வாசலில் நின்று கொண்டு துக்கம் விசாரிக்க வருபவர்களுக்கு கை கொடுத்துக் கொண்டிருந்தான்.... அஞ்சு பைசாவுக்கு பிரயோசனம் இல்லாதவண்டா என்று மணியைப் பற்றி மாமா என்னிடம் புலம்பிக் கொண்டே இருப்பார். பன்னென்டாவதைக் கூட ஒழுங்க முடிக்க முடியாத தண்டச் செம்மம்டா அவன்...ஆளும் கிராப்பும், சைக்கிள் கம்பெனியும்னு அவனை அப்டியாடா நான் நினைச்சுப் பாத்தேன்...ஒரு டாக்டராவோ, எஞ்சினியராவோ....மாமா பொறுமுவார்... சரி விடுங்க மாமா என்று ஆறிப்போன டீயை குடிக்கச் சொல்வேன் நான்... பார்கவியைப் பத்தி கவலை இல்லடா எனக்கு எம்.ஏ பிஎட் எப்டியும் ஏதாச்சும் ஒரு கவர்மெண்ட் ஸ்கூல்ல வேலை கிடைச்சுடும், அதுக்குதான் ஆரம்பத்துல ஸ்கூல்ல சேக்கும் போதே எம்பிசின்னு சொல்லி சேத்து வைச்சேன் உண்மையில நாமல்ல

தேடல்...16.04.2015!

எழுதுவதற்கான எல்லா சூழல்களும் இன்று இருப்பதாகத் தோன்றியது எனக்கு. மழை வரப் போகிறது என்று  எப்படி யூகிக்க எப்படி முடியுமோ அப்படித்தான். கருத்த மேகங்கள் இங்குமங்கும் அலைந்து கொண்டிருக்க குளிர்ந்த காற்று வீசி சூழலை ரம்யமாக்க இதோ எந்த நொடியிலும் கனிந்து விழுந்து விடும் தூறல் மழை என்று தோன்றுமல்லவா அப்படித்தான். சட சடவென்று புறச் சூழல்கள் அறுபடத் தொடங்கிய அந்த கணத்தில் பேனாவோடும் பேப்பரோடும் பரந்து விரிந்த வான் பார்க்கும் வசதி கொண்ட இந்த சாமானிய எழுத்தாளனின் பால்கனிக்கு நீங்களும் வந்தமர்ந்து பார்த்தீர்களானால் இதைப் புரிந்து கொள்வீர்கள்... கடந்த வாரத்தில் மலைகள் சூழந்த ஒரு சாலையில் பயணித்துக் கொண்டிருந்தேன். அவை ஒன்றும் என்னிடம் பேசவில்லை. பெருந்தவத்திலிருக்கும் யோகிகளைப் போல வாழ்க்கையை பற்றிய எந்த ஒரு அக்கறையுமின்றி ஆங்காங்கே அவை படுத்துக் கொண்டிருந்தன. சாலையோரமாய் வாகனத்தை நிறுத்தி விட்டு மலைகளோடு மலைகளாய் படுத்துக் கொள்ளலாமா என்று அவ்வளவு ஆசையாயிருந்தது எனக்கு. வெயிலோ, மழையோ, குளிரோ, பெருங்காற்றோ அவை அப்படியேதான் இருக்கின்றன. எல்லாவற்றையும் அவை முழுமையாய் வாங்கிக் கொள்கின்றன.